ஒரு சின்ன குச்சி போதும்... செலவே இல்லாம இந்த செடிகளை வளர்க்கலாம்
பெரிய செலவு எதுவும் இல்லாமல் புதுசா செடி வளர்க்கணும்னா, செடியின் தண்டு அல்லது குச்சியை வெட்டி நடுவதுதான் ரொம்ப சுலபமான வழி.
life-style Apr 04 2026
Author: Ganesh A Image Credits:Instagram
Tamil
பூச்செடிகள் வளர்க்கலாம்!
ரோஜா, செம்பருத்தி, மல்லிகை, குண்டு மல்லி, டேலியா, போகன்வில்லா போன்ற பூச்செடிகளை, அவற்றின் தண்டு மூலமாக ரொம்ப ஈஸியாக வளர்க்க முடியும்.
Image credits: Storyblocks
Tamil
கொடி வகை செடிகள்
மணி பிளான்ட், ஸ்னேக் பிளான்ட், டர்டில் வைன், மான்ஸ்டெரா போன்ற கொடி வகை செடிகளையும் இந்த முறையில் சுலபமாக வளர்க்கலாம்.
Image credits: Getty
Tamil
செடி நட சரியான முறை
செடியின் குச்சி 4-6 இன்ச் நீளம் இருக்க வேண்டும் (நமது உள்ளங்கை நீளத்தை விட கொஞ்சம் அதிகம்). 2-3 கணுக்கள் இருக்கும் ஆரோக்கியமான ஒரு கிளையைத் தேர்ந்தெடுங்கள்.
Image credits: Instagram
Tamil
குச்சியை எப்படி வெட்டணும்?
கிளையின் கீழ்ப்பகுதியில் உள்ள இலைகளை அகற்றிவிடுங்கள். குச்சியை நேராக வெட்டுவதற்குப் பதிலாக, ஒருபுறம் சாய்வாக (Cross) வெட்டுங்கள்.
Image credits: Instagram
Tamil
இப்படித்தான் நட வேண்டும்
இப்படி வெட்டிய கிளையை தண்ணீரில் அல்லது ஈரமான மண்ணில் நட்டு, நிழலான இடத்தில் வையுங்கள்.
Image credits: Instagram
Tamil
கவனிக்க வேண்டியவை
மண் எப்போதும் ஈரமாக இருக்கட்டும், ஆனால் அதிகமாக தண்ணீர் ஊற்ற வேண்டாம். பொதுவாக 10-20 நாட்களில் வேர்கள் வர ஆரம்பிக்கும். 3-4 வாரங்களில் ஒரு புதிய செடி தயாராகிவிடும்.