ஜென் Z ஸ்டைலில் செம லுக் வேண்டுமா? இந்த கொரியன் ஆக்சஸரீஸ் போதும்!
உங்களுக்கு செம லுக் வேணுமா? இதோ ஜென் Z-களின் ஃபேவரிட் கொரியன் ஆக்சஸரீஸ் பற்றிய முழு விவரம். உங்கள் ஸ்டைலை மாற்றப்போகும் 2026-ன் லேட்டஸ்ட் K-fashion ட்ரெண்ட்ஸ்
life-style-fashion Apr 02 2026
Author: Rsiva kumar Image Credits:Getty
Tamil
மினிமல் கொரியன் நெக்லஸ்கள்
பல நீளங்களில் உள்ள மெல்லிய செயின்களை ஒன்றாக அணிவது தற்போதைய டிரெண்ட். லேஸ் அல்லது மெல்லிய மெட்டல் சோக்கர்கள் உங்கள் தோற்றத்திற்கு ஒரு தனித்துவமான அழகை சேர்க்கும்.
Image credits: Getty
Tamil
கொரியன் ஹேர் ஆக்சஸரீஸ் மூலம் உங்கள் முடியை அழகாக்குங்கள்!
பெரிய க்ளா கிளிப்புகள், சாட்டின் ஸ்க்ரஞ்சீஸ் மற்றும் முத்துக்கள் பதித்த ஹேர் பின்கள் உங்கள் சிகை அலங்காரத்திற்கு ஒரு சிம்பிளான ஆனால் ஸ்டைலான தோற்றத்தை கொடுக்கும்.
Image credits: Getty
Tamil
சிறிய ஸ்டட்கள் முதல் பெரிய ஹூப்கள் வரை
மெல்லிய ஹூப் கம்மல்கள், நீளமான டாங்கிள் கம்மல்கள் மற்றும் அழகான ஸ்டட்கள் உங்கள் அன்றாட மற்றும் விசேஷ உடைக்கு கச்சிதமாக பொருந்தும். உங்கள் ஸ்டைலை வெளிப்படுத்துங்கள்.
Image credits: Getty
Tamil
கைகளில் ஸ்டைலை நிரப்பும் கொரியன் பிரேஸ்லெட்டுகள் மற்றும் மோதிரங்கள்!
மெல்லிய செயின் பிரேஸ்லெட்டுகள் மற்றும் பல விரல்களில் அணியும் சிறிய மோதிரங்கள் ஜென் Z-யின் விருப்பமான ஸ்டைல். இது உங்கள் தோற்றத்தை முழுமையாக்கும்.
பாஸ்டல் நிறங்களில் உள்ள சிறிய கிராஸ்பாடி பேக்குகள் மற்றும் கே-பாப் ஸ்டைல் பக்கெட் தொப்பிகள் உங்கள் ஃபேஷனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய ஆக்சஸரீஸ்.