Tamil

ஈக்கள், எறும்புகளை விரட்ட டிப்ஸ்!

Tamil

வீட்டின் தூய்மை

வீட்டில் எறும்புகள், ஈக்கள் வருவதற்கு முக்கிய காரணம் அழுக்கு மற்றும் உணவு பொருட்கள் தான். எனவே வீட்டை எப்போதுமே சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். 

Image credits: social media
Tamil

உப்பு மற்றும் எலுமிச்சை பயன்பாடு

வீட்டில் எறும்புகள் இருக்கும் இடத்தில் எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு தெளிக்கவும். எலுமிச்சையில் இருக்கும் அமிலம் எறும்புகளை விரட்டியடிக்கும்.

Image credits: Pinterest
Tamil

வினிகர் மற்றும் தண்ணீர் பயன்பாடு

ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வினிகர், தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஈக்கள், எறும்புகள் அதிகமாக இருக்கும் இடத்தில் தெளித்தால், அவை ஓடிவிடும். மீண்டும் வீட்டிற்குள் நுழையாது.

Image credits: Freepik
Tamil

கிராம்பு மற்றும் பிரியாணி இலை பயன்பாடு

கிராம்பு மற்றும் பிரியாணி இலையில் இருந்து வரும் கடுமையான வாசனை எறும்புகள், ஈக்களை விரட்டியடிக்கும். எனவே இவற்றை சமையலறை, உணவு வைக்கும் இடத்தில் வைக்கவும்.

Image credits: Getty
Tamil

சூரிய ஒளி மற்றும் காற்று

வீட்டின் ஈரப்பதம், இருள் காரணமாக எறும்புகள், ஈக்கள் வரும். எனவே சூரிய ஒளி சுத்தமான காற்று வீட்டிற்குள் வரும் வகையில் வீட்டின் கதவை சிறிது நேரம் திறந்து வைக்கவும்.

Image credits: Getty
Tamil

குப்பைகளை சேர்க்காதே!

வீட்டில் குப்பைகளை திறந்து வைத்தால் ஈக்கள் பெருகும். எனவே குப்பைகளை எப்போதுமே மூடி வைக்கவும். முக்கியமாக உடனே அப்புறப்படுத்தி விடுங்கள்.

Image credits: freepik

கால்சியம் நிறைந்த 10 உணவுகள்

'P' எழுத்தில் துவங்கும் பெண் குழந்தைகளின் அழகான பெயர்கள்!

போலி தேயிலையை ஈஸியாக கண்டுபிடிப்பது எப்படி?

யூரிக் அமிலத்தை குறைக்கும் சிவப்பு நிற உணவுகள் லிஸ்ட்!