பேக்கிங் சோடாவில் சில துளிகள் தண்ணீர் கலந்து பேஸ்ட் போலாக்கி அதை மிக்ஸியில் கறை படிந்த இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்ய வேண்டும்.
2 ஸ்பூன் வெள்ளை வினிகருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் ஊற்றி ஒரு அடி அடித்தால் ஜாரில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறை நீங்கிவிடும்.
மிக்ஸி ஜாடியை தண்ணீரால் கழுவி பின் அதன் உள்ளே எலுமிச்சை தோலை வைத்து சேர்க்கவும். சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாற்றில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து கறை படிந்த இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
மிக்சி மற்றும் அதன் ஜாரை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போது சுத்தமான துணிகள் தொடர்ந்து சுத்தம் செய்தால் கறைகள் படியாது.
மிக்ஸிங் மற்றும் அதன் ஜாரை சுத்தம் செய்யும்போது இரசாயனங்கள் அல்லது சிராய்ப்பு கொண்ட ஸ்கிரப்களை பயன்படுத்த வேண்டாம்.
பாத்திரம் கழுவும் லிக்விட், சலவைத்தூள் மற்றும் வினிகர் ஆகவற்றை ஒன்றாக கலந்து அதை கறை படிந்த இடத்தில் தடவி மெதுவாக தேய்த்துப் பிறகு சுத்தம் செய்யவும்.
மிக்ஸி மற்றும் அதன் ஜாரை சுத்தம் செய்த பிறகு உடனே பயன்படுத்த வேண்டாம். நன்கு காய்ந்த பிறகு, குறைந்த வேகத்தில் தொடங்கி பிறகு படிப்படியாக வேகத்தை அதிகரிக்கலாம்.