life-style
இரவு உணவில் சிறிதளவு தயிர் சேர்த்துக் கொண்டால் குடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதனால் குடல் ஆரோக்கிய மேம்படும் மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கும்.
சூடான நீர் அல்லது வேறு ஏதேனும் மூலிகை பானம் கூட குடிக்கலாம். இது செரிமானத்தை எளிதாக உதவுகிறது மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் வருவதை தடுக்கும்.
உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்றால் செரிமானத்தை மோசமாக்கும். எனவே நிறைய தண்ணீர் குடிக்கவும். இது செரிமானத்தை மேம்படுத்தும்.
இரவு உணவுக்கு பிறகு சில எளிய உடற்பயிற்சி செய்தால் வாய் தொல்லை வராது, செரிமானம் மேம்படும்.
இரவு உணவுக்குப் பிறகு வயிற்று மசாஜ் செய்தால் செரிமான அமைப்பை தூண்டும். இதனால் வயிற்றில் எரிச்சல், வீக்கம் குறையும்.
இது இயற்கையாகவே செரிமானத்தை தூண்டும் மற்றும் வீக்கம், வாயுவை குறைக்கும். எனவே இரவு உணவுக்கு பிறகு சிறிதளவு பெருஞ்சீரகம் சாப்பிட்டால் செரிமானம் மேம்படும்.
இரவு உணவுக்கு பிறகு சுமார் 10-15 நிமிடங்கள் நடப்பது செரிமானத்தை ஊக்குவிக்கும். மேலும் வாயு போன்ற பிரச்சனைகள் வராது.
இரவு சாப்பிட்ட பிறகு உடனே தூங்க வேண்டாம். சுமார் 1-2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்.