life-style
ஆரோக்கியம் உணவுடன் பிரிக்க முடியாத ஒன்றாகும். எனவே, உணவு சரியாக ஜீரணிக்க சில விதிகளை பின்பற்றவும்.
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால், செரிமான அமைப்பின் செயல்பாடு பாதிக்கப்படும். உணவும் ஜீரணமாகாது. சாப்பிட்ட உணவின் சத்துக்களும் கிடைக்காது.
பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், இரவு உணவுக்கு பிறகு பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல. செரிமான கோளாறு, வயிறு வலி, வீக்கம் ஏற்படும்.
சாப்பிட்ட உடனே இனிப்பு சாப்பிட்டால் உடல் பருமன் கூடும். பல நோய்கள் தாக்க வாய்ப்பு உண்டு.
சாப்பிட்ட பிறகு கடுமையான உடற்பயிற்சி, யோகா செய்யாதீர்கள். இது நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.
சாப்பிட்ட பிறகு டீ காபி குடித்தால் அசிடிட்டி பிரச்சனை ஏற்படும். குறிப்பாக இரவில் குடிக்க வேண்டாம்.
சாப்பிட்ட உடனே தூங்குவது நல்லதல்ல. அதுபோல ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
சாப்பிட்ட பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பது நல்லது. இதனால் செரிமான ஆரோக்கியமாக இருக்கும்.