life-style

தென்னிந்தியாவில் பிரபலமான பிரியாணி வகைகள்

ருசியான பிரியாணி முதல் பல வகையான உணவுகளுக்கு தென்னிந்தியா புகழ்பெற்றது. தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான 7 பிரியாணி வகைகள் இங்கே உள்ளன. அவை..
 

Image credits: Pexels

ஹைதராபாத் பிரியாணி

ஹைதராபாத்துக்கு பெருமை சேர்ப்பது இந்த ஹைதராபாத் பிரியாணி தான். இது பாஸ்மதி அரிசி, பிரியாணி மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் நறுமணமும் சுவையும் வேற லெவல்.
 

Image credits: Instagram

தலசேரி பிரியாணி

கேரளாவில் மிகவும் பிரபலமான பிரியாணியில் இதுவும் ஒன்று.  இது பாஸ்மதி அரிசிக்கு பதிலாக ஜீரா ரைஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் இந்த அரிசி மிகவும் பிரபலம்.

Image credits: social media

மலபார் பிரியாணி

கேரளாவின் மலபார் பகுதியில் ஜீரா அரிசி, பிரியாணி மசாலா மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து இந்த பிரியாணி தயாரிக்கப்படுகிறது. 

Image credits: social media

கோழிக்கோடு பிரியாணி

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இந்த பிரியாணி மிகவும் பிரபலம். பாஸ்மதி அரிசி மற்றும் பிற மாசலா கலவையுடன் இந்த பிரியாணி சமைக்கப்படுகிறது.

Image credits: Image: Freepik

ஆம்பூர் பிரியாணி

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இந்த பிரியாணி மிகவும் பிரபலம். இது சீரக சம்பா அரிசி மற்றும் பிரியாணி மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
 

Image credits: Getty

செட்டிநாடு பிரியாணி

காரைக்குடி தான் செட்டிநாடு பிரியாணிக்கு மிகவும் பிரபலம். காரமான சுவையில், சம்பா அரிசி, பிரியாணி மசலா பொருட்கள் கொண்டு இந்த பிரியாணி தயாரிக்கப்படுகிறது.
 

Image credits: Pexels

திண்டுக்கல் பிரியாணி

தரமான பிரியாணி என்றாலே அது திண்டுக்கல் பிரியாணி தான். இதன் சுவையும் நறுமணமும் அமோகமாக இருக்கும். இந்த பிரியாணி சீராக சம்பா அரிசி கொண்டு தயாரிக்கப்படுகிறது.

Image credits: Image: Freepik

தினமும் காலையில் ரஸ்க் சாப்பிடுகிறீர்களா..? ஜாக்கிரதை!!

காதலர் தினம் 2024: காதல் பயணத்திற்கான சிறந்த 8 இடங்கள்..

இரவில் படுத்த உடனே தூக்கம் வர டிப்ஸ்..!

K-Drama வை பெண்கள் அதிகம் விரும்பி பார்ப்பதற்கு இதுதான் காரணம்!