life-style
ஊட்டி காதலர்களுக்கான சிறந்த இடமாகும். தேயிலை தோட்டங்களின் நறுமணமும் மலைகளின் இயற்கை வாசலையும் இந்த காதல் பருவத்தில் உங்களை ஆற்றுப்படுத்தும்.
காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு மிகவும் ரொமான்டிக் இடமாகும். இது தேனிலவுக்கு பிரபலமான இடங்களில் ஒன்றாகும். இயற்கையின் அழகால் நிறைந்த இந்த இடத்திற்கு துணையுடன் சென்று மகிழுங்கள்.
உங்களை பல வழிகளில் ஆச்சரியப்படுத்தும் இடங்களில் ஒன்று. மூணாறு. மலை வாசஸ்தலம் நிறைந்த இந்த இடத்தில் உங்கள் துணையுடன் சென்று இந்த காதலர் தினத்தை கழியுங்கள்.
நீங்கள் ஒரு மறக்க முடியாத காதல் பயணத்தை அனுபவிக்க விரும்பினால் ஆலப்புழா சிறந்த இடமாகும். இது உங்கள் மனதையும், இதயத்தையும் நிச்சயம் கவரும்.
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று காதல் சின்னமான தாஜ்மஹால். இது ஆக்ராவில் உள்ளது. தாஜ்மஹாலில் இருந்து காதலர் தினத்தை கொண்டாடுவது உண்மையில் ஒரு கனவான வழி.
கர்நாடகாவில் இருக்கும் இந்த மலை வாசஸ்தலம் காபியின் மனம், இயற்கையின் வாசனையுடன் உங்கள் உணர்வுகளை ஈர்க்கும். எனவே, காதலர் தினத்திற்கு இது சிறந்த இடமாகும்.
காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு கோவா சிறந்த இடங்களில் ஒன்று. இங்கு உங்கள் துணையுடன் கடற்கரை பகுதியில் கைகளை பிடித்து சூரிய அஸ்தமனத்தை பார்த்து நடந்து செல்லலாம்.
காதலர் தினத்தை கழிப்பதற்கு சிம்லா சிறந்த இடமாகும். இங்கு உங்கள் அன்புக்குரியவர்களுடன் இனிமையான காலநிலையை அனுபவிக்க முடியும்.