தினமும் வெறும் வயிற்றில் நீரில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிட்டு அதன் நீரை குடிக்க வேண்டும். இது உங்கள் உடல்நலத்தை பல வழிகளில் மேம்படுத்தும்.
நீரில் ஊறவைத்த உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது. செரிமானத்தை வலுப்படுத்துகிறது.
உலர் திராட்சையில் வைட்டமின் B12, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவை இரத்த சோகை பிரச்சனையை குறைக்கின்றன. அதாவது நீரில் ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிட்டால் உடலில் ரத்தம் அதிகரிக்கும்.
உலர் திராட்சையில் போரான், கால்சியம் அதிகம் உள்ளது. இவை எலும்புகளை வலுப்படுத்துகின்றன. எலும்பு முறிவைத் தடுக்கிறது. முதியவர்களுக்கு இந்த உலர் திராட்சை மிகவும் நன்மை பயக்கும்.
உலர் திராட்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் அதிகம் உள்ளது. இவை உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன. ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதய நோய் அபாயம் குறைகிறது.
உலர் திராட்சையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சுருக்கங்களை குறைத்து சருமத்தை இளமையாகக் காட்டுகின்றன. இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கின்றன.
தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் நீரில் ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிட்டால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் அழகாகவும் இருப்பீர்கள். இதன் பலன் 15 நாட்களிலேயே தெரியும்.