உடலில் யூரிக் அமிலம் அதிகமானால் வரும் '7' அறிகுறிகள்
life-style Oct 31 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
மூட்டு வலி
மூட்டு வலி, மூட்டுகளில் வீக்கம் போன்றவை யூரிக் அமிலம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
Image credits: Getty
Tamil
மூட்டுகளில் சிவந்த நிறத்தில் தடிப்பும், வீக்கமும்
சில மூட்டுகளில் சிவந்த நிறத்துடன் கூடிய தடிப்பு, வீக்கம், ஊசி குத்துவது போன்ற வலி, மரத்துப்போதல் போன்றவை ஏற்படலாம்.
Image credits: Getty
Tamil
உள்ளங்கால்களில் எரிச்சல் மற்றும் வலி
உள்ளங்கால்களில் அதிக எரிச்சல், வலி, கால்களில் தீப்பிடித்தது போன்ற உணர்வு, கால்களில் மரத்துப்போதல் போன்றவை யூரிக் அமிலம் அதிகரித்ததன் அறிகுறியாக இருக்கலாம்.
Image credits: Getty
Tamil
நடக்க சிரமம்
உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது மூட்டு வலி ஏற்பட்டு, அதனால் நடக்க சிரமம் ஏற்படலாம்.
Image credits: Getty
Tamil
முதுகுவலி
யூரிக் அமிலப் படிகங்கள் முதுகெலும்பில் படிவது கடுமையான முதுகுவலிக்கு வழிவகுக்கும்.
Image credits: Getty
Tamil
சிறுநீரகக் கல்
யூரிக் அமிலம் மிக அதிகமாக இருந்தால், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image credits: Getty
Tamil
சரும பிரச்சனைகள்
உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும்போது சரும பிரச்சனைகளும் ஏற்படலாம்.
Image credits: Getty
Tamil
கவனத்திற்கு:
மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், சுயமாக நோயறிதல் செய்யாமல், கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். அதன் பிறகு மட்டுமே நோயை உறுதிப்படுத்தவும்.