உணவுப் பொருட்களை அதிகமாக வேகவைப்பதைத் தவிர்க்கவும். இது உணவின் சத்துக்களை இழக்கச் செய்யும்.
காய்கறிகளை சமைக்கும்போது அதன் சத்துக்கள் தண்ணீரில் கரையும். எனவே இந்த தண்ணீரை கொட்டக்கூடாது. இதை சூப்பில் சேர்த்து பருகலாம்.
காய்கறிகளை நீண்ட நேரம் வெட்டி வைப்பதைத் தவிர்க்கவும். இது காய்கறிகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை இழக்கச் செய்யும்.
காய்கறிகளின் ஊட்டச்சத்துக்கள் அதன் தோலில் தான் உள்ளது. கேரட், வெள்ளரி, உருளைக்கிழங்கு வெட்டும்போது கவனமாக இருக்கலாம்.
அதிக வெப்பத்தில் உணவுப் பொருட்களை வறுக்கக் கூடாது. இது உணவின் சத்துக்களை இழக்கச் செய்யும்.
சமைத்த உணவுகளை திறந்து வைப்பதைத் தவிர்க்கவும். இது கிருமிகள் வளரவும், உணவின் சுவை மற்றும் சத்துக்கள் குறையவும் காரணமாகும்.
உணவு சமைக்க சரியான பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில், உணவின் ஊட்டச்சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது.
உஷார்! இந்த காலை பழக்கங்கள் தான் சிறுநீரகத்தை பாதிக்கும்!
சாப்பிட்ட உடனே இந்த விஷயங்களை மறந்தும் செய்யாதீங்க..
பக்கவாதம் வராமல் தடுக்கும் சிறந்த உணவுகள்
படுத்ததும் தூங்க உதவும் உணவுகள்!!