life-style
குஜராத்தின் கட்ச்சில் அமைந்துள்ள மதபர் கிராமம் இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவிலேயே மிகவும் பணக்கார கிராமமாகும். இங்கு பல பெரிய தொழிலதிபர்கள் பிறந்துள்ளனர்.
மதபர் கிராமம் பல நகரங்களை விட முன்னணியில் உள்ளது. பெரிய பங்களாக்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு வறுமையே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு மூன்று சொகுசு கார்கள் உள்ளன.
இந்த கிராம மக்களிடம் மொத்தமாக ரூ.7,000 கோடி டெபாசிட் உள்ளது. அப்படி என்றால் இந்த கிராமத்தில் எத்தனை பணக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
மதபர் கிராமத்தில் நாட்டின் அனைத்து முன்னணி வங்கிகளும் உள்ளன. இதில் எச்டிஎஃப்சி, எஸ்பிஐ, பிஎன்பி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யூனியன் வங்கி ஆகியவை அடங்கும்.
மதபர் கிராமத்தில் 20,000 வீடுகளும், சுமார் 32,000 மக்களும் உள்ளனர். 1,200 குடும்பங்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றன. பெரும்பாலான குடியிருப்பாளர்கள் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
மதபர் கிராமத்தில் நகரத்தில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதல் நீச்சல் குளங்கள், தியேட்டர்கள் என அனைத்தும் உள்ளன. இங்கு கேபிள் ஹவுஸ்கள் கூட உள்ளன.
மதபர் கிராமம் பணக்கார கிராமம் ஆவதற்கு என்ஆர்ஐக்கள் தான். இவர்கள் வெளிநாடுகளில் பணம் சம்பாதித்து, இங்குள்ள வங்கிகளில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள்.