கிவி பழத்தில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
கிவி பழத்தில் டயட்டரி ஃபைபர் (Dietary Fiber) உள்ளது. இதைச் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
கிவி பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
கிவி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
கிவியில் உள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கிவி பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகமாக உள்ளன. இது உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்பைக் (Oxidative Stress) குறைக்க உதவும்.
கிவி பழத்தில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.
கிவி பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. இதை தினமும் சாப்பிடுவது, உடலில் நீர்ச்சத்தை குறையாமல் தக்கவைக்க உதவும்.
Gut Health: செரிமானம் சீராக வேண்டுமா? குடலுக்கு நல்ல 7 காய்கறிகள் இதோ
Carrot Benefits: இந்த ஒரு காய்கறி உங்கள் ஆரோக்கியத்தை மாற்றலாம்.!
Green Tea: எப்போ குடிக்கணும்? ராத்திரி குடிச்சா என்ன ஆகும் தெரியுமா?!
Weight Loss: உடல் எடையை குறைக்க உதவும் 7 குறைந்த கலோரி உணவுகள்