K-pop மற்றும் K-fashion கலாச்சாரத்தால், கொரியன் ஹேர் ஆக்சஸரீஸ் இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது.
இந்த கிளிப்புகள் பார்ப்பதற்கு க்யூட்டாக இருப்பது மட்டுமல்ல, மிகவும் எடை குறைவாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கும். இந்த 10 கொரியன் ஹேர் ஆக்சஸரீஸ்களை நீங்களும் டிரை பண்ணுங்க.
சிறிய பூக்கள் தொங்கும் இந்த கொரியன் மினி கிளிப்புகள் ஒரு சிம்பிள் ஹேர் ஸ்டைலை கூட அழகாக மாற்றும். ஒரு சாதாரண போனிடெயிலில் இதை மாட்டினால் போதும், உடனடி ரெடி லுக் கிடைக்கும்.
சிறிய டெய்ஸி பூக்கள் கொண்ட இந்த கலர்ஃபுல் கிளிப்புகள், வசந்த காலத்தை நினைவுபடுத்தும் ஒரு ஃப்ரெஷ் லுக்கைக் கொடுக்கும். தற்போது இவை ரெண்டிங்கில் உள்ளன.
கொண்டை ஹேர்ஸ்டைலுக்காகவே இப்போது பிரத்யேகமான கொரியன் போ ஹேர் ஆக்சஸரீஸ் வந்துவிட்டன. மார்க்கெட்டில் இது போன்ற பல எஸ்தெடிக் ஃபேப்ரிக் ரப்பர்கள் கிடைக்கின்றன.
போல்கா டாட் டிசைன் கொண்ட க்ளா கிளிப்புகள், மிகவும் க்ளீன், எஸ்தெடிக் மற்றும் டிரெண்டியான தோற்றத்தைக் கொடுக்கும். இதுவும் கோடைக்கால ஃபேஷனில் அதிக டிமாண்டில் உள்ளது.
ஒரே ஒரு கிளிப் மூலம் உங்கள் கொண்டையை ஹைலைட் செய்ய விரும்பினால், இது போன்ற கொரியன் பெர்ல் க்ரோ கிளிப் ஹேர் ஆக்சஸரியை வாங்குங்கள். இது நொடியில் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கும்.
ஃபேப்ரிக் போ ஹேர் கிளிப்புகளை நீங்கள் விரித்த கூந்தலில் பயன்படுத்தலாம். குரோஷே, கம்பளி, நூல் போன்றவற்றால் செய்யப்பட்ட இந்த போ கிளிப்புகள் ஒரு கிளாசிக் கொரியன் லுக்கைக் கொடுக்கும்.
சிறிய முத்துக்கள் பதிக்கப்பட்ட பெர்ல் மினி ஸ்னாப் கிளிப்புகள் எல்லா நிகழ்வுகளுக்கும் பொருத்தமாக இருக்கும். இதை பயன்படுத்தும்போது ஒரு நீட் மற்றும் கிளாஸியான கொரியன் வைப் கிடைக்கும்.