india
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த கோவில் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ..
இந்த கோயில் இந்துக்களின் மிக முக்கியமான புனித யாத்திரை தலமாக கருதப்படுகிறது. அயோத்தி ராமர் பிறந்த இடமாகவும், புனிதமான இடமாகவும் உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பாரம்பரிய நாகர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி, அகலம் 250 அடி, உயரம் 161 அடி ஆகும்.
ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்துடன், மூன்று அடுக்குகளைக் கொண்டது. இது மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் கொண்டது.
நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை மண்டபம் என மொத்தம் 5 மண்டபங்கள் இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன.
வளாகத்தின் 4 மூலைகளிலும் சூரியக் கடவுள், பகவதி தேவி, விநாயகர் மற்றும் சிவன் ஆகியோருக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கில் அன்னபூர்ணா ஆலயமும், அனுமன் ஆலயம் தெற்கிலும் உள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் எங்குமே இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்று ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை கூறியுள்ளது.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா 2022 இல் பிரமாண்ட ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ. 1,800 கோடி செலவிடப்படும் என்று மதிப்பிட்டுள்ளது.