india
சில்வெஸ்டர் டகுன்ஹாவும் அவரின் மனைவி நிஷாவும் 1966-ம் ஆண்டு அமுல் நிறுவனத்தின்‘ Utterly Butterly’ பிரச்சாரத்தை உருவாக்கினர்.
சிச்வெஸ்டரின் மனைவி நிஷா, முதலில் Utterly Amul என்ற டேக்லைனை வைத்திருந்தார். ஆனால் சில்வெஸ்டர் தான் ‘ Utterly Butterly Amul என்று அதனை மாற்றினார்.
அமுல் சிறுமியை மறைந்த பிரபல கார்ட்டூனிஸ் யூஸ்டேஸ் பெர்னாண்டஸ் வரைந்தார். இந்த சின்னம் முதன்முதலில் மும்பையில் அறிமுகமானது.
1969-ம் ஆண்டு, சில்வெஸ்டர், தனது சொந்த விளம்பர நிறுவனமான டகுன்ஹா கம்யூனிகேஷன் என்ற விளம்பர நிறுவனத்தை தொடங்கினார்.
அமுல் சிறுமி படத்தை, தனது போட்டி நிறுவனமான போல்சன் வெண்ணெய் சிறுமிக்கு டஃப் கொடுக்கும் விதமாக அமுல் சிறுமியை உருவாக்கினர்
மிசோரமை சேர்ந்த குழந்தை பாடகி எஸ்தர் லால்துஹாவ்மி, ஏ. ஆர். ரஹ்மானின்‘ மா துஜே சலாம் பாடலை அச்சிறுமி பாடிய வீடியோ 2020-ல் வைரலானது. எஸ்தரை அமுல் சிறுமியாக அமுல் நிறுவனம் கௌரவித்தது.
அச்சு ஊடகங்களின் வழியை பின்பற்றி அமுல் வெளியிட்ட விளம்பரங்கள் என்றென்றும் நினைவில் இருப்பவையாக மாறின.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு 370-ஐ நீக்கப்பட்டதை குறிக்கும் வகையில் ‘ union ki har territory mein’ உள்ளிட்ட விளம்பரங்களை வெளியிட்டது.
மக்களவையில் ராகுல்காந்தி பிரதமர் மோடியை கட்டி அணைத்தை குறிப்பிடும் வகையில் ‘Embracing ya embrassing?’ என்ற விளம்பரத்தை அமுல் வெளியிட்டது.