பிரதமர் மோடிக்காக முன்கூட்டியே திட்டமிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதல் பெண்மணி ஜில் பைடன் விருந்து ஏற்பாடு செய்தனர்.
Image credits: google
கொடி
இந்திய மூவர்ணக் கொடி, அமெரிக்க கொடியை போன்ற அலங்காரத்துடன் உணவுகள் பரிமாறப்பட்டன.
Image credits: google
உணவு வகை
பிரதமர் மோடியின் விருப்பம் சைவ உணவு என்பதால், தாவர உணவில் நிபுணத்துவம் பெற்ற செஃப் நினா கர்ட்டிஸுடன் இணைந்து வெள்ளை மாளிகை ஊழியர்கள் உணவுகளை தயாரித்தார்களாம்.
Image credits: google
தினை உணவு
வெள்ளை மாளிகை விருந்தில் தினை உணவுகளும் இடம் பெற பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்து இருந்ததால், அதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
Image credits: google
மூவர்ண அலங்காரம்
விருந்தின்போது ஒவ்வொரு மேசையிலும் காவி நிற பூக்களுடன் பச்சை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விருந்துக்கு மொத்தம் 400 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர்.
Image credits: google
பர்ஸ்ட் கோர்ஸ்
மரைனேட் செய்யப்பட்ட தினை, வறுக்கப்பட்ட சோள கர்னல் சாலட், தர்பூசணி, அவகோடோ சாஸ் போன்றவையும் உணவு பரிமாற்றத்தில் இடம் பெற்றிருந்தன.
Image credits: google
இத்தாலி உணவு
காளான், கிரீமி குங்குமப்பூவுடன் அரிசி கலந்த ரிசொட்டோ என்ற இத்தாலி வகை உணவு, வறுத்த கொடுவா மீன், எலுமிச்சை- வெந்தயம் தயிர் சாஸ், தினை கேக் ஆகியவை விருந்து மேசையில் இருந்தன.
Image credits: google
பரிசு
வெள்ளை மாளிகையில் ஜோ பைடன், ஜில் பைடனுக்கு இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட வைரத்தை சிறப்பு பரிசாக மோடி வழங்கினார்.
Image credits: google
மோடி கிப்ட்
80 வயதானவர்களுக்கு வழங்கும் பசு, நிலம், எள் விதை, தங்கம், நெய், துணி, உணவு தானியங்கள், வெல்லம், வெள்ளி, உப்பு போன்றவை ஜோ பைடனுக்கு மோடி வழங்கினார்.