அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
india Jan 18 2024
Author: Ramya s Image Credits:Social media
Tamil
நேரடி ஒளிபரப்பு
அன்றைய தினம் கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
Image credits: X (twitter)
Tamil
எப்படி நேரலையில் பார்ப்பது?
ராமர் கோயிலின் ஒட்டுமொத்த கும்பாபிஷேக நிகழ்ச்சியையும் டிடி செய்தியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்காக மிகப்பெரிய எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Image credits: Pixabay
Tamil
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்திலும் ஒளிபரப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்திலும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
Image credits: Our own
Tamil
இந்திய தூதரங்களிலும் ஒளிபரப்பு
இதே போல் பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
Image credits: Social media
Tamil
பிரதமர் மோடி பங்கேற்பு
வரும் 22ம் தேதி நடைபெற உள்ள பிரம்மாண்ட கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். மேலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க உள்ளனர்.
Image credits: Our own
Tamil
தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் அழைப்பு
அயோத்தி கோயிலை கட்டிய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான சாமியார்களும் பங்கேற்க உள்ளனர்.
Image credits: social media
Tamil
7000 பேருக்கு அழைப்பு
சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள், நாட்டின் முக்கிய விஐபிக்கள் என மொத்தம் 7000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.