india

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா

அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட விழா குறித்து நீங்கள் கட்டாய தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ..

Image credits: our own

7,000 விஐபிக்கள் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாதுக்கள், என சுமார் 7,000 பேர் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

Image credits: Our own

கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை

ஜனவரி 22-ம் தேதி அன்றே கோயில் கருவறையில் ராம் லல்லா அதாவது குழந்தை பருவ ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 

Image credits: X (twitter)

7 நாள் சடங்குகள்

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாள் பாரம்பரிய சடங்குகள் நேற்று முதல் தொடங்கி உள்ளது. இந்த சடங்குகள் வரும் 22-ம் தேதி வரை நடைபெறும். 

Image credits: social media

பிரம்மாண்ட சிலைகள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் மற்றும் பிரம்மாண்ட சிலைகளின் புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டது. 

Image credits: social media

நாகர் பாணி கட்டிடம்

அயோத்தி ராமர் கோயில் பாரம்பரிய நாகர் பாணி முறையில் கட்டபப்ட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட , ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது.

Image credits: social media

5 மண்டபங்கள்

கோயிலின் முதல் தளத்தில், ஸ்ரீ ராம் தர்பார் இருக்கும். நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை என மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Image credits: social media

தீபாவளி போல் கொண்டாட வேண்டும்

ஜனவரி 22-ம் தேதி மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தீபாவளி போல் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

Image credits: Social Media

யாரும் கோயிலுக்கு வர வேண்டாம்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா அன்று பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

Image credits: Social Media

அமுல் நிறுவனத்தின் மறக்க முடியாத விளம்பரங்கள்

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு தடபுடலாக விருந்து..! ஸ்பெஷல் கிப்ட்..

Delhi Murder: நாட்டையை உலுக்கிய டெல்லியின் 10 கொடூர கொலை வழக்குகள்

பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றத்தை கட்டி முடிக்க எத்தனை கோடி செலவானது?