india

ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

விரதம் இருக்க போறீங்களா?

ராமர் கோயில் கும்பாஷேக தினத்தன்று விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள் பின்பற்ற விதிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

விரதத்தை எப்படி தொடங்குவது?

கும்பாபிஷேக நாளன்று அதிகாலையில் எழுந்து நீராடி, தூய்மையான ஆடைகளை அணிந்து, விரதம் நல்லபடியாக முடியவேண்டும் என்று ஸ்ரீராமரை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

தியானம்

பகவான் ஸ்ரீ ராமரின் சிலை அல்லது திரு உருவப்படத்திற்கு முன்பு அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்யுங்கள்.

மனமுருக பிரார்த்தனை

ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்தை பெற அவரின் சிலை அல்லது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, தீப தூப ஆராதனை செய்து மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள்.

பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்

விரதம் இருக்கும் போது அன்றைய நாளின் ஒரு வேளையாவது பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். விரதம் இருக்கும் போது தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம்.

உணவு உண்ணக்கூடாது

விரதம் மேற்கொள்ளும் போது கண்டிப்பாக உணவு உண்ணக்கூடாது. தேவை எனில் காபி, டீ போன்றவற்றை அருந்தலாம்.

கோபம் கூடாது..

விரதம் இருக்கும் போது கண்டிப்பாக கோபப்பட கூடாது. கோபத்தில் மோசமான வார்த்தைகளை பேச நேரிடும். இது விரதத்தின் பலன்களை பாதிக்கும்.

விரதத்தை எப்படி முடிப்பது?

கும்பாபிஷேக நாளின் முடிவில் ஸ்ரீ ராமரை வேண்டிக்கொண்டு பால், பழங்கள் அல்லது லேசான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.

Find Next One