india
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
அயோத்திக்கு சாலை அல்லது ரயில் அல்லது வான்வழி மூலம் எப்படி செல்லலாம்?
அயோத்தியில் இருந்து 118 கி.மீ தொலைவில் கோரக்பூர் விமான நிலையம் உள்ளது. 125 கி.மீ தொலைவில் சௌத்ரி சரண் சிங் விமான நிலையம் அமைந்துள்ளது.
பிரயாக்ராஜ், வாரணாசி விமான நிலையங்களுக்கு சென்று, அங்கிருந்தும் அயோத்திக்கு செல்லலாம்.
ஃபைசாபாத், அயோத்தி ஆகியவை மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் ஆகும். அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து இங்கு வழக்கமான ரயில்கள் செல்கின்றன.
உ.பி மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமான பேருந்து சேவை கிடைக்கிறது. டெல்லி, லக்னோ, கோரக்பூரில் இருந்து அயோத்திக்கு பேருந்து வசதி உள்ளது.
டெல்லியில் இருந்து 636 கி.மீ தொலைவிலும், லக்னோவில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், வாரணாசியில் இருந்து 200 கி.மீ தொலைவிலும் பிராயக்ராஜில் இருந்து 160 கி.மீ தொலைவிலும் அயோத்தி உள்ளது.