Tamil

வெள்ளரிக்காயுடன் சாப்பிடக் கூடாத 3 பொருள்கள் இவைதான்!

Tamil

வெள்ளரியுடன் தயிர் சாப்பிடாதே!

வெள்ளரிக்காய், தயிர் இவை இரண்டும் குளிர்ச்சியான தன்மையுடையது. இந்த இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் அதிகப்படியான சளி, இருமலை ஏற்படுத்தும். இதுதவிர, செரிமானத்தை மெதுவாக்கும்.

Image credits: Freepik
Tamil

வெள்ளரிக்கையுடன் தக்காளி சாப்பிடாதே!

வெள்ளரிக்காயில் காரத்தன்மையும், தக்காளியில் அமிலத்தன்மை உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்தால் அமில-கார எதிர்வினை ஏற்படுத்தும். இதனால் வாயு, அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படும்.

Image credits: Pixabay
Tamil

வெள்ளரிக்காயுடன் உப்பு மற்றும் மசாலா பொருட்கள்

வெள்ளரிக்காய் சாப்பிடும் போது அதிக உப்பு மற்றும் அசலா பொருட்கள் சேர்க்க வேண்டாம். காரணம் இவை வெள்ளரிக்காயின் ஆரோக்கியமான கூறுகளை பலவீனப்படுத்தும், உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்.

Image credits: Pixabay
Tamil

வெள்ளரிகாய் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாமா?

வெள்ளரிக்காயில் தண்ணீர் நிறைந்துள்ளதால், அதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் வாயுத்தொல்லை, மலச்சிக்கல் பிரச்சனை அதிகரிக்கும்.

Image credits: Pixabay
Tamil

வெள்ளரிக்காயை எப்படி, எப்போது சாப்பிட வேண்டும்?

வெள்ளரிக்காயை பகலில் அதுவும் குறிப்பாக மதிய உணவுக்கு பிறகு சாப்பிடுவது நல்லது.

Image credits: Getty
Tamil

வெறும் வயிற்றில் வெள்ளரிக்காய் சாப்பிடலாமா?

காலையில் வெறும் வயிற்றில் வெள்ளரிக்காயை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும் மற்றும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.

Image credits: our own
Tamil

குறிப்பு

வெள்ளரிக்காயை வாங்கி வந்த உடன் சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அதன் மேல் ரசாயனங்கள், மெழுகு போன்றவை படிந்திருக்கலாம். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Image credits: Getty

வெயிலால் ஏற்படும் சோர்வை தடுப்பது எப்படி?

குழந்தையின் கண் ஆரோக்கியமாக இருக்க 'இத' ஃபாலோ பண்ணுங்க..!

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

தாடி வளரலயா? ஒரே வாரத்தில் வளர சூப்பர் டிப்ஸ்!!