ஆரோக்கியமான கொழுப்புகளான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஞாபக சக்தியையும் மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சால்மன் போன்ற கொழுப்பு மீன்கள், வால்நட்ஸ், ஆளி விதைகள், சியா விதைகள், முட்டை, சோயா பீன்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
வைட்டமின் பி5, பி6, பி9 (ஃபோலேட்), பி12 போன்றவை மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரை, பருப்பு வகைகள், ஆரஞ்சு, முட்டை, பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள், குறிப்பாக வைட்டமின் சி, இ நிறைந்த உணவுகள் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
புளுபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, கருமை நிற பழங்கள், டார்க் சாக்லேட், ஆரஞ்சு, திராட்சைப்பழம், கொட்டைகள், விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மெக்னீசியம் நிறைந்த உணவுகள் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும்.
பூசணி விதைகள், கீரை, பாதாம், டார்க் சாக்லேட், வெண்ணெய் பழம், வாழைப்பழம், முந்திரி போன்றவற்றில் மெக்னீசியம் உள்ளது.
உடல் சூடு குறைய தயிர் சாப்பிட வேண்டிய நேரம் தெரியுமா?
சின்ன பூசணி விதைக்குள் இவ்வளவு நன்மைகளா?
பாலுடன் சேர்த்து சாப்பிட கூடாத பழங்கள் இவைதான்!
அவசர காலத்தில் தேவைப்படும் உணவுப் பொருட்கள்