பாலுடன் திராட்சை ஆரஞ்சு போன்ற புளிப்பு பழங்களை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அவற்றில் இருக்கும் அமிலத்தன்மை, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மாங்காயுடன் ஒருபோதும் பால் சேர்த்து குடிக்க கூடாது. காரணம், மாங்காயில் இருக்கும் அமலபண்புகள் செரிமான அமைப்பை கெடுக்கும்.
பாலுடன் கொய்யாப்பழம் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும். மேலும் ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படும்.
பாலுடன் பப்பாளியை ஒருபோதும் சேர்த்து சாப்பிடக்கூடாது. மீறினால் வயிற்றுப்போக்கு அஜீரணம் பூஜா பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
பாலுடன் மாதுளையை ஒருபோதும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டும் சேர்ந்து உங்களது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். குறிப்பாக வாந்தி பிரச்சனையை ஏற்படுத்தும்.
அன்னாச்சி பழத்தை ஒருபோதும் பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அன்னாச்சியில் இருக்கும் அமிலப்பண்புகள் செரிமானத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
பாலுடன் ப்ளம்ஸ் சாப்பிட்டால் செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனுடன் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.