தினமும் அதிகளவு எண்ணெயில் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவது உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இதன் விளைவாக இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.
ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி பயன்படுத்தினால் உடலில் டிரான்ஸ் கொழுப்பு அதிகரிக்கும். இதனால் உடலில் வீக்கம் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படும்.
அதிக எண்ணெயில் சமைத்த உணவை சாப்பிட்டால் ஜீரணிக்க கடினமாகும். இதன் விளைவாக வயிற்றில் வாயு, கனத்தன்மை, அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
அதிக எண்ணெய் கொண்ட உணவை சாப்பிட்டால் சருமம் பாதிக்கப்படும். அதாவது முகப்பரு, ஒவ்வாமை மற்றும் எண்ணெய் சருமம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தினமும் அதிக எண்ணெய் நிறைந்த உணவை சாப்பிட்டால் கல்லீரலில் அழுத்தம் அதிகரித்து கொழுப்பு கல்லீரல், கல்லீரல் செயல்பாடு தொந்தரவு போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படும்.
குழந்தைகளுக்கு அதிக வறுத்த மற்றும் எண்ணெய் நிறைந்த உணவை கொடுத்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். மற்றும் விரைவில் சோர்வடைந்து விடுவார்கள்.
எண்ணெயில் ஒமேகா-6 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால் இது உடலில் ஒமகா-3 குறைபாட்டை ஏற்படுத்தும் இதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும்.
சமையலுக்கு எண்ணெய் அவசியமாக இருந்தாலும் அதன் அதிகப்படியான நுகர்வு உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே அவற்றை மிதமாக பயன்படுத்துங்கள்.