30 வயதிற்கு பிறகு சருமத்தை சரியாக பராமரிக்கவில்லை என்றால் சுருக்கங்கள், சரும நிறம் மாறுதல், ஈரப்பதம் இல்லாமை, பளபளப்பு இழப்பு, சருமம் தொய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ப்ரோக்கோலி, முந்திரி, பெர்ரி வைட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகளை உங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அசைவமாக மீன், கோழி, முட்டை சாப்பிடலாம்.
30 வயதிற்கு பிறகு முகம் எப்போதும் பளபளப்பாக இருக்க அதிக தண்ணீர் குடிக்கவும். நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாகும்.
தினமும் 7-8 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மன அழுத்தம், புகை பிடிப்பதிலிருந்து விலகி இருங்கள். பாதாம் வால்நட்ஸ் போன்ற ஒமேகா 3 நிறைந்த உணவுகளை சாப்பிடவும்.
சருமத்தை ஆரோக்கியமாக வைக்க ஸ்கிரப் செய்யுங்கள். தினமும் சருமத்திற்கு சன் ஸ்கிரீன், மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள். இவை சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும்.
30 வயதிற்கு பிறகு முகத்தில் பொலிவை அதிகரிக்க தினமும் உடற்பயிற்சி, யோகா செய்யுங்கள். இதனுடன் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
30 வயதிற்குப் பிறகு பதப்படுத்தப்பட்ட உணவுகள், குப்பை உணவுகள் அதிகப்படியான எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.