பச்சை பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கறைகளை நீக்கும். மேலும் முகத்தில் ஏற்படும் நிறமி சுருக்கங்கள் மற்றும் தோல் பதனிடுதல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்.
தினமும் பச்சை பாலை பஞ்சு உதவியுடன் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமத்திற்கு ஈரப்பதத்தை, ஊட்டச்சத்தை வழங்கும்.
பச்சைப் பாலில் கடலை மாவு கலந்து அதை முகத்தில் தடவி குளிர்ந்து நீரில் முகத்தை கழுவ வேண்டும் இது சருமத்தை சீராக்கும், பொலிவை கொடுக்கும்.
பச்சை பாலில் மஞ்சள் கலந்து 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து, சருமத்தை மென்மையாக்கும்.
பச்சை பாலில் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.
பச்சை பாலில் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இது முகப்பரு, தழும்புகள், சுருக்கங்கள் மற்றும் நிறமி பிரச்சனைகளை போக்கும்.
பச்சை பாலுடன் முல்தானி மிட்டி கலந்து பேஸ்ட் போலாக்கி, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது சரும கறைகள், முகப்பரு, நிறமிகளை போக்கும்.