பிளாக் காபியில் இருக்கும் காஃபின், எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி இவை இரண்டும் உடலின் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்தி, எடை குறைக்கும்.
காபியின் சுறுசுறுப்பான தன்மை, எலுமிச்சையின் புளிப்பு சுவை சேர்ந்து செரிமான அமைப்பை செயல்படுத்தி மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வாயு பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
தினமும் காலையில் பிளாக் காபியில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடலை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்கும் மற்றும் மனசோர்வை குறைக்கும்.
எலுமிச்சையில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், பிளாக் காபியின் நச்சு நீக்கும் விளைவு ஆகியவை சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காபியில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தொற்றுக்களை எதிர்த்து போராடும்.
பிளாக் காபியில் எலுமிச்சை கலந்து குடித்தால் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
உடற்பயிற்சி செய்யும் முன் பிளாக் காபியில் லெமன் கலந்து குடித்தால் ஆற்றலை அதிகரிக்கும். நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்க உதவும் மற்றும் அதிக கலோரிகளை எரிக்கும்.