குளிர்பானங்களில் அதிகளவு கலோரிகள், சர்க்கரை இருக்கிறது. எனவே இதை அதிகமாக குடித்தால் எடை அதிகரிக்கும்.
குளிர்பானங்களில் அதிகளவு சர்க்கரை உள்ளதால் அதன் அதிகப்படியான நுகர்வு இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும். இதனால் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது.
குளிர்பானங்களில் அதிகளவு கலோரிகள் உள்ளதால் அதன் அதிகமாக குடித்தால் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.
குளிர்பானங்களை அதிகமாக குடித்தால் பல் பிரச்சனை ஏற்படும். மேலும் பற்களின் எனாமல் சேதமடைந்து, பற்சிப்பி பிரச்சினை அதிகரிக்கும்.
கூல் ட்ரிங்க்ஸில் அதிகளவு பிரக்டோஸ் உள்ளதால் இது தொப்பை கொழுப்பை ஏற்படுத்தும். அதிகரித்த தொப்பை கொழுப்பு மாரடைப்பு அபாயத்திற்கு வழிவகுக்கும்.
குளிர்பானங்களில் இருக்கும் கலோரிகள், பிரக்டோஸ் கல்லீரலில் கொழுப்பை சேர்க்கும். இதன் அதிகப்படியான நுகர்வு கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதிகமாக குளிர்பானங்கள் குடித்தால் சிறுநீரகம் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் எடையை குறைக்கும் பெஸ்ட் தென்னிந்திய உணவுகள் லிஸ்ட்!!
முகப்பருக்களை உண்டாக்கும் ஆறு உணவுகள்
சியா விதையை இப்படி சாப்பிடுங்க - உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 7 உணவுகள்