கிரீன் டீயை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் அமிலத்தன்மை ஏற்படுத்தும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் இரைப்பை அழற்சி அபாயத்தை ஏற்படுத்தும்.
கிரீன் டீயில் நிறைய காஃபின் உள்ளதால் வெறும் வயிற்றில் குடித்தால் அதிக பதட்டமாக உணரலாம்.
தினமும் அதிகமாக அதுவும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடித்தால் தூக்கம் பாதிக்கப்படும்.
கிரீன் டீயில் இருக்கும் டானின் உடலில் இரும்புச்சத்தை குறைத்து விடும். இதுநாள் நீங்கள் அதிக பலவீனமாக உணருவீர்கள்.
கிரீன் டீயில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கும் மற்றும் சருமத்திற்கும் பலன் நன்மைகளை வழங்கும்.
உணவுக்குப் பிறகு அல்லது காலை உணவோடு கிரீன் டீயை குடிக்கலாம். இதனால் அதன் நன்மைகளை பெற முடியும் மற்றும் செரிமானமும் சீராக இருக்கும்.
முடியை ஆரோக்கியமாக வைக்கும் 3 விதைகள்!! எப்படி சாப்பிடனும்?
மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் 7 பானங்கள்
தக்காளியில் ஐஸ்கியூப் செய்து முகத்தில் பூசுங்க.. நம்ப முடியாத நன்மைகள்
மாலை நேர உடற்பயிற்சியின் 6 நன்மைகள்!