சில சமயங்களில் கனமான பயிற்சி செய்யும் போது தசை நார்களில் நுண்ணிய விரிசல்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக உடற்பயிற்சிக்கு பிறகு வலி ஏற்படும்.
இந்த உடற்பயிற்சிக்குப் பின் 12-24 மணி நேரத்திற்குள் ஏற்படும் வலி. இது சாதாரணமான செயல்முறை. மேலும் இது உடலின் மீட்பு செயல்முறையின் ஒருபகுதி.
புதிய உடற்பயிற்சி செய்தாலோ அல்லது வழக்கத்தை விட நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தாலோ அதற்கு பிறகு வழி மற்றும் சோர்வு அதிகமாக ஏற்படும்.
உடற்பயிற்சிக்கு பின் நீட்சி செய்யாமல் இருந்தால் தசைகள் இறுக்கமாக்கி, இரத்த ஓட்டத்தை குறைத்து வலியை ஏற்படுத்தும்.
உடற்பயிற்சி செய்யும் போது உடலில் லாக்டிக் அமிலம் உருவாகி, எரிச்சல், சோர்வு ஏற்படுத்தும். இது நீடித்தால் வலி ஏற்படும்.
உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்றால் தசைகள் சரியாக மீட்க முடியாது. இதனால் உடலில் பிடிப்பு வலி ஏற்படும்.
உடற்பயிற்சிக்கு பிறகு வலி ஏற்படாமல் இருக்க தூக்கம் மற்றும் புரதம் மிகவும் முக்கியம். இவை இல்லை என்றால் வலி நீண்ட நாள் நீடிக்கும்
உடற்பயிற்சிக்கு பிறகு வலியானது 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
கோடையில் நீளமான கூந்தலை பராமரிக்கும் எளிய டிப்ஸ்..!
'இந்த' பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிச்சா டேஞ்சர் தான்!
பால் குடிக்கும்போது இந்த காய் மட்டும் கண்டிப்பா சாப்பிடாதீங்க!!
பல் துலக்கும் முன் எவ்வளவு தண்ணீர் குடித்தால் நல்லது?