கோடை காலத்தில் முடி சீக்கிரமாகவே அழுக்காகிவிடும். அதற்காக வலுவான ஷாம்பை போட்டால் முடி வறண்டு போகும் மற்றும் உதிரும். எனவே ரசாயனமில்லாத லேசான ஷாம்புவை பயன்படுத்துங்கள்.
கோடை வெப்பத்தால் வியர்வை காரணமாக உச்சந்தலையில் அரிப்பு மற்றும் அழுக்கு தங்கி பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளிக்கவும்.
கோடையில் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தலைக்கு முக்காடு, தொப்பி அல்லது ஏதாவது அணியுங்கள். இல்லையெனில் தலைமுடி சூரிய ஒளி கதிர்களால் பாதிக்கப்படும்.
முடி வளர்ச்சிக்கு தலை முடிக்கு எண்ணெய் தேய்ப்பது முக்கியம். ஆனால் கோடையில் கனமான எண்ணெயை தேய்ப்பது நல்லதல்ல. லேசான எண்ணெயை பயன்படுத்தவும்.
கோடையில் உடலில் போதியளவு நீர்ச்சத்து இல்லையென்றால் முடி ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே முடி இறப்பதமாக இருக்க ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள், பழங்கள் சாப்பிடுங்கள்.
கோடைகாலத்தில் ஹேர் ட்ரையர், ஸ்ட்ரைட்னர் ஆகியவற்றிலிருந்து முடிந்தவரை விலகி இருங்கள். இவை தலைமுடியை பலவீனப்படுத்தும் மற்றும் இயற்கை பளபளப்பை கெடுத்துவிடும்.
கோடை காலத்தில் தலைமுடிக்கு வாரத்திற்கு இரண்டு முறை தயிர், கற்றாழை போன்றவற்றைக் கொண்டு ஹேர் மாஸ்க் போடுங்கள். இதனால் முடி உதிர்தல் குறையும்.