சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் உடலில் மோசமான விளைவு ஏற்படுத்தும். அது என்ன என்றும், அவை என்னென்ன பழங்கள் என்றும் இங்கு பார்க்கலாம்.
சில பழங்களில் செரிமான நொதிகள் உள்ளதால் இயற்கையாகவே உணவை ஜீரணிக்க உதவும். அத்தகைய பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் உணவை ஜீரணிக்க கடினமாக்கும்.
சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். எனவே அத்தகைய பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்.
வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் ரத்த சர்க்கரை அதிகரிக்கும்.
தர்பூசணி, வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதில் ஏற்கனவே அதிக நீர்ச்சத்து உள்ளதால் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகள், வயிற்று உப்புசம் ஏற்படும்.
கொய்யா பழத்தில் வைட்டமின் சி உள்ளதால் அதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் அஜீரணம் ஏற்படும்.
சிட்ரஸ் பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் அந்த பழத்தில் இருக்கும் அமிலம் வயிற்றில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் அமலத்துடன் இணைந்து அமில தன்மையை ஏற்படுத்தும்.
பெர்ரி, மாம்பழம், ஆப்பிள், சீதாப்பழம் போன்ற பழங்களையும் சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம். மீறினால் சளி, இருமல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும்.