health

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான சில குறிப்புகள் இதோ..!!

Image credits: Getty

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், நட்ஸ்கள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை உண்ணுங்கள். 
 

Image credits: Getty

நன்கு நீரேற்றமாக இருங்கள்

ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். வழக்கமான குடல் செயல்பாடு, உகந்த தசை செயல்திறன், நோய் எதிர்ப்பு, தோல் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் அவசியம். 

Image credits: Getty

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

வாரத்திற்கு குறைந்தது 150 நிமிட உடற்பயிற்சி அல்லது வாரத்திற்கு குறைந்தது 5 நாட்கள் 30 நிமிட உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கவும். 
 

Image credits: Getty

போதுமான நல்ல தூக்கம்

தூக்கத்திற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. 7 முதல் 9 மணிநேரம் தூங்கவும். நல்ல தூக்கம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.

Image credits: Getty

மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள்

அளவுக்கு அதிகமாக மது அருந்துவது கல்லீரல் நோய்கள் மற்றும் நீண்ட காலத்திற்கு கல்லீரல் புற்றுநோய்க்கு கூட வழிவகுக்கும். 

Image credits: Getty

புகை பிடிக்காதீர்கள்

உலகம் முழுவதும் நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடித்தல் முக்கிய காரணமாகும் . நுரையீரல் புற்றுநோயைத் தவிர , மற்ற உறுப்பு புற்றுநோய்களின் வளர்ச்சிக்கும் புகைபிடித்தல் பங்களிக்கிறது.

Image credits: Getty

சூரிய ஒளியில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது தோல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சன்ஸ்கிரீன், நீண்ட கை ஆடைகள் மூலம் சூரிய ஒளியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty

உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்

ஒற்றைத் தலைவலி முதல் இதயப் பிரச்சனைகள் வரை பல நோய்களுக்கு மன அழுத்தம் காரணமாகும். ஓவியம் வரைவது, இசை கேட்பது என மன அழுத்தத்தைப் போக்க வழிகளைக் கண்டறியவும்.

Image credits: Getty

பாதுகாப்பான உடலுறவு

உங்கள் பாலியல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. பாலியல் பரவும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க ஆணுறைகளைப் பயன்படுத்துங்கள்.

Image credits: Getty
Find Next One