Food

ஆரோக்கியம்

ஒரு வயதுக்குள்ளாக இருக்கும் குழந்தைகளுடைய செரிமான மண்டலம் முழுவதுமாக வளர்ச்சி அடைந்திருக்காது. ஆகவே சில உணவுகளை அவர்களுக்கு கொடுக்கக் கூடாது. 

Image credits: freepik

ஆறு மாதம்

முதல் 6 மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் தான் கொடுக்கவேண்டும். அதன் பிறகே திட உணவுகளை கொடுக்க தொடங்கவேண்டும். 

Image credits: freepik

பால்

பசும் பால்/ சோயா பாலில் உள்ள புரதச்சத்தை செரிமானம் செய்ய குழந்தைகள் சிரமப்படுவார்கள். இது குழந்தைகளின் கிட்னிக்கு அழுத்தம் கொடுக்கும். 

Image credits: freepik

சிட்ரஸ் பழங்கள்

குழந்தைகளுக்கு ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் கொடுப்பதால் அரிப்பு, செரிமானக் கோளாறு போன்ற வயிற்று பிரச்சனைகள் வரும். 

Image credits: freepik

உப்பு

நாம் கொடுக்கும் உப்பிட்ட உணவுகளை செரிக்கும் அளவுக்கு குழந்தைகளுடைய சிறுநீரகம் வளர்ச்சி அடைந்திருக்காது. 

Image credits: freepik

சர்க்கரை

சந்தைகளில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் உள்ள வேதிபொருள்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும். 

 

Image credits: freepik

திராட்சை

குழந்தைகளுக்கு திராட்சை கொடுத்தால் அவர்கள் அப்படியே விழுங்கிவிடுவார்கள். இது தொண்டை வலியை உண்டாக்கும். 

Image credits: freepik

முட்டை

எட்டு மாத குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாம். ஆனால் மஞ்சள் கருவை கொடுங்கள். சில குழந்தைகளுக்கு வெள்ளை கரு அலர்ஜி தரலாம். முடிந்தவரை 1 வயதுக்கு மேல் கொடுங்கள். 

Image credits: freepik

தண்ணீர்

முதல் 6 மாதங்களுக்கு குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது. ஏனெனில் தண்ணீரில் சத்துக்கள் கிடையாது ஆனா அதில் உள்ள கனிம பொருள்களை குழந்தைகளின் சிறுநீரகம் வெளியேற்ற சிரமப்படும். 

Image credits: Getty
Find Next One