Fitness
விராட் கோலியின் பிட்னஸ் ஒரே நாளில் நிகழ்ந்தது இல்லை. முதல் உலக கோப்பை மேட்ச் ஆடிய பிறகு அவர் ஆளே மாறிவிட்டார்.
விராட் கோலி ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையே உண்கிறார். கீரை வகைகள் பச்சை காய்கறிகளை தவறாமல் சாப்பிட்டு வருகிறார். சைவ பிரியராக இருந்தாலும் சிக்கன், சால்மன் சாப்பிடும் பழக்கம் உள்ளது.
அதிக மசாலாக்கள் சேர்க்காத நீராவியில் அவித்த முட்டை போன்ற உணவுகளை 90% உண்கிறார். அதில் கருப்பு மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்க்கிறாராம்.
விராட் கோலி சுவையை பெரிதாக நினைக்காமல் ஆரோக்கியத்தை மனதில் வைத்து உண்கிறார். என்ன மனுசன்யா!
விராட் கோலி சாலட் வகைகளை விரும்புகிறார். அதில் ஆலிவ் ஆயிலை மழைச்சாரலாக தூவி விடுகிறார்.
கோலிக்கு பஞ்சாபி பாணியில் தயாரித்த ராஜ்மா, பருப்பு உணவுகள் ரொம்ப பிடிக்கும்.
இனிப்பு பண்டங்களை தவிர்க்கும் கோலி, நாள்தோறும் கிரீன் டீ குடிக்கிறார்.
கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக உணவு பழக்கத்தை ஆரோக்கியமாக வைத்து ஃபிட்னஸை கட்டுக்குள் வைத்துள்ளார்.
விராட் கோலி வெறித்தனமாக வொர்க் அவுட் செய்வார். கார்டியோ, தசை பயிற்சி, எடை தூக்குதல் என பவட் புல்லான உடற்பயிற்சிகளை அசால்ட்டாக செய்வார்.