Fitness
எடையை குறைக்க அதிகாலையில் நீங்கள் குடிக்க வேண்டிய பானங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
எடை இழப்புக்கு இஞ்சி டீ உதவும். இதில் கொஞ்சம் தேன் சேர்த்து பருகினால் அஜீரணத்திற்கு நல்லது. காலையில் குடித்தால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். வீக்கம் குறையும்.
எடையை குறைக்க கொத்தமல்லி விதைகளை இரவில் ஊறவைத்து அந்த தண்ணீரை காலையில் குடிக்க வேண்டும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
எடை குறைக்க ஓமத்தை தண்ணீரில் போட்டு 3 -4 நிமிடங்கள் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிற்று கொழுப்பு குறையும்.
உடல் எடையை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகரை குடிக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதை குறைவாக எடுத்து கொள்ளுங்கள்.
உங்களுடைய வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க கிரீன் டீ உதவும். உடல் எடையை குறைக்க ஒரு நாளில் அதிகாலை, மாலை என 2 முதல் 3 முறை கிரீன் டீ குடிக்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம். உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் நல்லது.
ஆரோக்கியமான எடை இழப்புக்கு வெந்தய நீர் வரப்பிரசாதம். இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உடலுக்கு உதவும். இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரைக் குடிக்கவும்.
எடையை இழக்க இந்த பானங்களை மட்டும் அருந்தினால் போதாது. மிதமான உடற்பயிற்சியும், முறையான உணவு பழக்கமும் தேவை.