Fitness
உடல் எடை கட்டுக்குள் இருந்தால் தான் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.
உடல் எடையை குறைப்பது தொடர்பான நிறைய கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன.
வெறுமனே தொப்பையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி செய்தால் எத்தனை மாதம் ஆனாலும் தொப்பை குறையாது.
முழு உடலுக்கும் பயிற்சிகள் எடுத்து கொள்ள வேண்டும். மொத்த உடலுக்கும் பயனுள்ள உடற்பயிற்சிகளை செய்தால் தான் எடை இழக்கும். தொப்பை குறையும்.
வெவ்வேறு உடற்பயிற்சிகள் செய்து உடலை பழக்க வேண்டும். எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே மாதிரியான பயிற்சிகள் எடை இழப்புக்கு உதவாது.
அதிக கொழுப்பு உணவுகளை தவிர்த்து புரத உணவுகளை சாப்பிட வேண்டும். உங்களின் ஒரு கிலோ எடைக்கு 1.5 கி முதல் 2 கி புரதம் வீதம் எடுத்து கொள்ள வேண்டும்.
90 கிலோ எடையுள்ள நபர் 130 முதல் 180 கிராம் வரை புரதம் எடுத்து கொள்ளவேண்டும்.
படியேறுதல், வாக்கிங் போன்றவை செய்யலாம். இப்படியான உடல் செயல்பாடுகளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வீட்டு உணவு தவிர்த்து உணவகங்களில் சாப்பிட்டால் புரத உணவுகளை ஆர்டர் செய்யுங்கள். துரித உணவுகளை தவிருங்கள்.