திடீர்னு எடை குறையுதா? காரணம் இந்த 5 ஆபத்தான நோய்கள்தான்!
health Aug 12 2025
Author: Kalai Selvi Image Credits:Social Media
Tamil
சர்க்கரை நோய்
டைப் 2 நீரிழிவு நோய் உடலில் குளுக்கோஸை சரியாக பயன்படுத்த முடியாமல் போகும். இதனால் ஆற்றலுக்காக தசைகள், கொழுப்பை எரிக்கும். இதனால் எடை இழப்பு ஏற்படும்.
Image credits: Getty
Tamil
தைராய்டு
தைராய்டு சுரப்பியானது அதிகமாக தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்யும்போது வளர்ச்சிதை மாற்றம் வேகமடையும். இதன் விளைவாக எடை இழப்பு ஏற்படும்.
Image credits: Getty
Tamil
புற்றுநோய்
வயிறு, கணையம், நுரையீரல் போன்ற புற்றுநோய்களின் முதல் அறிகுறி எடை இழப்பு தான். புற்றுநோய் செல்கள் அதிக ஆற்றலைப் பயன்படுத்துவதால், உடலானது நோயை எதிர்த்து போராடுவதால் இது நிகழ்கிறது.
Image credits: Getty
Tamil
மன அழுத்தம்
நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் போன்றவை செரிமானம், பசி ஆற்றல் நிலைகளை பாதிக்கும். இதனால் எடை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளன.
Image credits: Freepik
Tamil
குடல் அழற்சி நோய்
இந்நோயால் உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் திறன் பாதிக்கப்படும். இதனால் எடை இழப்பு ஏற்படும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வீக்கம், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் ஏற்படும்.
Image credits: Getty
Tamil
மருத்துவரை எப்போது அணுகவும்?
உணவு, உடற்பயிற்சி போன்ற எந்த மாற்றமும் செய்யாமல் எடை குறைந்தால் அதிலும் குறிப்பாக சோர்வு, செரிமான பிரச்சனை, மனநிலை மாற்றம் போன்றவற்றால் இது ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.