health
சுருள்பாசி என்ற ஸ்பைருலினா பாசி தாய்ப்பாலுக்கு அடுத்தப்படியான சத்துக்களை கொண்டது. பசுவின் பாலை காட்டிலும் 4 மடங்கு சத்துள்ளது.
நீலப்பச்சை பாசி இனத்தில் உள்ள ஒருவகை உப்பு தான், ஸ்பைருலினா. இதில் வைட்டமின் பி, சி, டி, ஈ, பினோலிக், லினோலெனிக் அமிலம் ஆகியவை உள்ளன.
விண்வெளி பயணம் செய்யும் நேரங்களில் ஸ்பைருலினாவை தான் ஆராய்ச்சியாளர்கள் உண்கின்றனர். இதில் 55-65% வரை புரதம் உள்ளது.
ஸ்பைருலினாவில் கொழுப்பு இல்லை. அதிக புரதம் தான் உள்ளது. இது நம்முடைய செரிமான சக்தியை அதிகரிக்கும்.
ஸ்பைருலினா பாசி உடலில் ஆக்சிஜனேற்றத்தைக் குறைக்கவும், வீக்கத்தைத் தடுக்கவும் உதவுகிறது. இதனால் புற்றுநோய் அபாயம் குறையும்.
நச்சுத்தன்மை வாய்ந்த ஆர்சனிக் கலந்த தண்ணீர் உள்ள இடத்தில் ஸ்பைருலினாவை வளர்த்தால், ஆர்சனிக் நச்சை உறிஞ்சி கொண்டு நமக்கு நன்னீரை தரும்.
ஸ்பைருலினா செல் சேதத்தை தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைக்கும்.
உடலுக்கு தேவைப்படும் புரதச்சத்தை ஸ்பைருலினா கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
தேன் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா?
கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை கண்டறிவது எப்படி?
அரிசி சாதத்துடன் இதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.. உஷார்!
கோடையில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!