health

கோடைகாலம்

கோடைகாலத்தில் சீரகத் தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. 

சீரகத் தண்ணீர்

உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க சீரகத் தண்ணீர் உதவும். வெப்ப பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது. 

ஊட்டச்சத்துக்கள்

சீரக விதைகளில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் காணப்படுகின்றன.

வெப்ப பிரச்சினை

அதிக வியர்வையால் ஏற்படும் நீரிழப்பு பிரச்சினையை சரிகட்டும். சீரகத் தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். 

சரும பிரச்சனை

சீரகத் தண்ணீரில் உள்ள சத்துக்கள் சருமத்தை பளிச் என்று மாற்றும். உடல் கழிவுகளை வெளியேற்றும். 

நோய் எதிர்ப்பு சக்தி

சீரகத் தண்ணீரில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். பல நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.  

கல்லீரல்

சீரகத் தண்ணீர் குடிப்பது கல்லீரலுக்கு நல்லது. உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சுகளை வெளியேற வைக்கும். 

ரத்த அழுத்தம்

சீரகத் தண்ணீரில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும், இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.  

எடை குறைப்பு

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தவறாமல் சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவும். 

செரிமான அமைப்பு

கோடைகாலத்தில் மக்களுக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகளை சீரகத் தண்ணீர் குறைக்கும். மலச்சிக்கல், அஜீரணம் ஆகிய வயிற்று பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும். 

பழங்களில் எதற்கு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது தெரியுமா? இனி வாங்கவே தோனாது

என்ன ஏலக்காய் தண்ணி குடிச்சா இவ்வளவு நன்மை கிடைக்குமா....!!!

தினமும் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!!

நிர்வாணமாக தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?