வேகமாக சாப்பிட்டால் செரிமான நொதிகள் சரியாக தூண்டப்படாது. இதனால் செரிமான கோளாறு ஏற்படும். உணவும் ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
அவசர அவசரமாக உணவை சாப்பிடும் போது உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
மிக விரைவாக உணவை சாப்பிடும் போது மூளையில் மோசமான விளைவு ஏற்படுத்தும். இதனால் மன அழுத்தம், தலைவலி ஏற்படும்.
நீங்கள் உணவை மிக வேகமாக சாப்பிடுகிறீர்கள் என்றால் வாயு பிரச்சனை, வயிறு உப்புசம் மற்றும் வாந்தி கூட ஏற்படும்.
உணவை மிக வேகமாக சாப்பிட்டால் உடலால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சி முடியாமல் போய்விடும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
அவசர அவசரமாக சாப்பிடும் போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். இதனால் இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.
உணவை மிகவும் வேகமாக சாப்பிடுவதால் உடலில் குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிக்கும். இதனால் விரைவில் சர்க்கரை நோய் வந்துவிடும்.
செரிமானக் கோளாறுகளை போக்கும் உணவுகள் இதோ!
ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாத '7' பழங்கள்!
இந்த '5' டீ போதும்! தொண்டை புண், சளி பிரச்சினை குணமாகும்!
தினமும் முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?