அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்துக் கொண்டால் உடலின் நீரிழிப்பு ஏற்படும். இதனால் தலைவலி, ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும்.
உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டால் இரத்த நாளங்களின் சுவர் பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி அலர்ஜி, வீக்கத்தை ஏற்படுத்தும்.
அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்துக் கொண்டால் உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இரத்தத்திலிருந்து அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற சிறுநீரகமும் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
அதிகப்படியான உப்பு மாரடைப்பு உள்ளிட்ட அபாயகரமான இதய நோய்களை ஏற்படுத்தும்.
அதிகப்படியான உப்பு உயிர் அணுக்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றி ரத்த ஓட்டத்தில் நுழைந்து விடும். இதனால் அதிகம் தாகம் ஏற்படும்.
அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் பக்கவாத பாதிப்பையும் ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ரொம்ப காலம் வாழனுமா? தினமும் 1 கிண்ணம் தயிர் சாப்பிடுங்க!
வேர்கடலையை இப்படியா சாப்டுவீங்க? ஊறவைச்சு சாப்பிட்டால் 7 நன்மைகள்!
ஆயிரம் நன்மைகள் கொண்ட ஆரஞ்சு பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
எடையை குறைக்கும் போது சாப்பிட கூடாத காய்கறிகள்!!