உடற்பயிற்சிக்குப் பின் அல்லது ஜிம்மிற்கு சென்று வந்த பிறகு சுமார் அரை மணி நேரம் (அ) ஒரு மணி நேரத்திற்குள் லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். இது தசைகள் வளர உதவும்.
Image credits: Pinterest
Tamil
உடற்பயிற்சிக்குப்பின் சாப்பிடுவது ஏன் முக்கியம்?
உடற்பயிற்சிக்கு பின் உடனே சாப்பிட்டால் உடலானது ஊட்டச்சத்துக்களை விரைவாக உறிஞ்சிவிடும். சரியான நேரத்தில் சாப்பிடாவிட்டால் உடலில் சோர்வு, பலவீனம், தசை இழப்பு ஏற்படும்.
Image credits: Social Media
Tamil
எந்த மாதிரியான உணவை சாப்பிடலாம்?
உடற்பயிற்சிக்கு பின் அதிக புரதம், கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவை சாப்பிடுவது நன்மை பயக்கும். இது தசைகளை வலுப்படுத்தும் மற்றும் உடலுக்கு ஆற்றலை வழங்கும்.
Image credits: Getty
Tamil
உடற்பயிற்சிக்கு பின் இவற்றை சாப்பிடலாம்
வாழைப்பழம், அவித்த முட்டை, ஓட்ஸ், சீஸ், பாசிப்பருப்பு, உலர் பழங்கள், ஸ்மூதி போன்றவற்றை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவை விரைவில் ஜீரணமாகி உடலுக்கு ஆற்றலை வழங்கும்.
Image credits: freepik
Tamil
தண்ணீர் குடிக்கவும்!
உடற்பயிற்சியின் போது அதிக வியர்வையால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். எனவே உடற்பயிற்சிக்குப் பின் முதலில் தண்ணீர் (அ) எலுமிச்சை நீர் குடிக்கவும். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
Image credits: social media
Tamil
நினைவில் கொள்
உடற்பயிற்சிக்கு பிறகு சோர்வாக இருக்கும். எனவே உடனே சாப்பிடாமல் சில நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். பிறகு ஒரு மணி நேரத்திற்குள் லேசான உணவை சாப்பிடவும்.