ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பது புகை பிடிப்பதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது.
உடற்பயிற்சிகள் செய்தாலும் நீங்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தால் டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய்கள் வரும்.
சுமார் 30 முதல் 60 நிமிடங்கள் ஒரு முறை அலாரம் வைத்து 3 மூன்று நிமிடங்களாவது நடக்கவும் அல்லது 10 ஸ்குவாட்ஸ் எடுக்கவும்.
இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்களது உடலில் ரத்த ஓட்டம் மேம்படும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை மதிய உணவாக சாப்பிடவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்த்தால் தாகம் இருக்காது. ஆனால் ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் தியானம், மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
மேலே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை வேலை பார்க்கும் பெண்கள் தினமும் பின்பற்றி வந்தால் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
தலைமுடியை உறுதியாக்கும் '6' புரோட்டீன் உணவுகள்
ஒரு மாதம் வெந்தய நீர் குடித்தால் இத்தனை நோய்கள் தீரும்!!
உப்பு முக்கியம்! ஆனா ரொம்ப சேர்த்தா இந்த பிரச்சனை வரலாம்
ரொம்ப காலம் வாழனுமா? தினமும் 1 கிண்ணம் தயிர் சாப்பிடுங்க!