health

தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா?

 

 

 

Image credits: freepik

முடி உதிர்வுக்கு காரணமான உணவுகள்

முடி உதிர்வுக்கு மாசுபாடு உட்பட பல காரணங்கள் உள்ளன. இதேபோல் நாம் உண்ணும் சில உணவுகளும் முடி உதிர்வுக்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Image credits: Getty

பதப்படுத்தப்பட்ட உணவு

பதப்படுத்தப்பட்ட உணவுகளால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உப்பு அதிகம் உள்ள சிப்ஸ், நூடுல்ஸ்களை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Image credits: Freepik

பொரித்த உணவுகள்

எண்ணெய்யில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் முடி உதிர்வு ஏற்படும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

Image credits: google

சர்க்கரை உணவுகள்

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு முடி மெலிந்து, விரைவில் உதிர்ந்து விடும் வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

Image credits: Getty

தீய பழக்கவழக்கங்கள்

புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கவழக்கங்கள் முடியின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்து அதிகமாக முடி இழப்பை உண்டாக்குகின்றன. 

Image credits: unsplash

உப்புத்தன்மை உணவுகள்

உப்புத் தன்மை அதிகம் உள்ள சிப்ஸ், ஊறுகாய் சாப்பிட்டால் முடி உதிர்ந்து விடும் என்பது நிபுணர்களின் கூற்றாக உள்ளது. உப்பை குறைவாக சாப்பிடுவதே உடலுக்கும் சிறந்தது. 

Image credits: Getty

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியை அதிகமாக சாப்பிடுபவர்களின் முடி வேர்களுக்கு இரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இதனால் முடி உதிர்வுடன் பொடுகு தொல்லையும் அதிகரிக்கும். 

Image credits: Getty

எனர்ஜி பானங்கள்

எனர்ஜி பானங்களை அதிகமாக குடிப்பவர்களுக்கும் முடி உதிர்வு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றில் உள்ள செயற்கை ரசாயனங்கள் முடியின் ஆரோக்கியத்தை கெடுக்கின்றன. 

Image credits: Getty

மருத்துவரின் ஆலோசனை

முடி உதிர்வுக்கு காரணமான பொதுவான தகல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உடல்நலம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனைக்கும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும். 

Image credits: our own

உடல் எடையை குறைக்க குடிக்கக் கூடாத '5' பானங்கள்!

தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் 'இந்த' பிரச்சனை.. அலர்ட்!

தினமும் '1' கப் காபி குடிச்சா உடலில் இதுதான் நடக்கும்!

சாதத்திற்கு பதில் இவற்றை சாப்பிடுங்கள், எடை குறைப்புக்கு நல்லது!