அதாவது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் நீங்கள் 20 வினாடிகள் இடைவெளி எடுத்து, 20 அடி தூரத்தில் உள்ள ஏதாவது ஒன்றின் மீது கவனத்தை செலுத்துங்கள்.
கண்களை தவறாமல் பரிசோதனை செய்வதே பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் பார்வை பிரச்சனை தடுப்பதற்கு இது ரொம்பவே முக்கியம்.
லேப்டாப்பில் இருந்து அதிக வெளிச்சம் கண் கூச்சத்தை ஏற்படுத்தும். எனவே கண்ணை கூசுவதை குறைக்க உதவும் பிரதிபலிப்பு எதிர்ப்பு கொண்ட லென்ஸ்கள் அல்லது கண்ணாடியை போடுங்கள்.
லேப்டாப்பை திரையை கண்மட்டத்திற்கு சற்று கீழேயும், கை நீளத்திற்கும் வைக்கவும். நீங்கள் உட்காரும் நாட்களில் போதுமான ஆதரவு வழங்குவதை உறுதி செய்யுங்கள்.
கண்களை ஈரப்பதமாக வைத்திருக்க அடிக்கடி சிமிட்டுங்கள். குறிப்பாக நீண்ட நேரம் திரையை பார்க்கும் போது.
லேப்டாப்பை அதிக நேரம் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் குறைந்தது 5 நிமிடங்கள் கணினியை பார்க்காமல், வெளியில் அல்லது வேறு எங்காவது பாருங்கள்.
உங்களது திரைக்கு போதுமான அளவு பிரகாசம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.