டயட்ல தீவிரமா இருக்கீங்களா? இந்த பிரச்சனை வரலாம் ஜாக்கிரதை!
health May 12 2025
Author: Kalai Selvi Image Credits:FREEPIK
Tamil
வளர்சிதை மாற்றம் பாதிப்படையும்
தீவிரமான டயட் சிலருக்கு மெதுவான வளர்ச்சிதை மாற்ற பிரச்சனையை ஏற்படுத்தும். இதன் காரணமாக எடையை குறைப்பதில் சிக்கல் ஏற்படும்.
Image credits: Getty
Tamil
முடி உதிர ஆரம்பிக்கும்!
நீங்கள் அதிகமாக டயட்டில் இருந்தால் முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்க நேரிடும். உண்மையில் உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால், இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
Image credits: freepik
Tamil
எலும்புகள் பலவீனமாகும்!
அதிகப்படியான உணவு கட்டுப்பாடு சிலருக்கு எலும்புகள் பலவீனமடைய செய்யும். அதாவது உணவில் கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால், எலும்புகள் பலவீனமடையும்.
Image credits: Getty
Tamil
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும்!
ஒருவரின் தீவிர டயட் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடையச் செய்யும். இதனால் அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது.
Image credits: interest
Tamil
தசை பிடிப்பு பிரச்சனை
அதிகப்படியான உணவு கட்டுப்பாடு உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இதன் விளைவாக இதய துடிப்பு, தசை பிடிப்பு போன்ற பிரச்சனைகள் வரும்.
Image credits: Freepik
Tamil
சிறுநீரக கல் பிரச்சனை
உடலில் போதுமான அளவு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால், சிறுநீரக கற்கள் பிரச்சனையை ஏற்படுத்தும்.
Image credits: Getty
Tamil
சோர்வு மற்றும் தலைச்சுற்றல்
அதிகப்படியான உணவு கட்டுப்பாட்டால் சோர்வு, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகமுள்ளது.