Tamil

குழந்தை நலமாக பிறக்க கர்ப்ப காலத்தில் செய்யக் கூடாத தவறுகள்!!

Tamil

மருந்துகள்

கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. மீறினால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

Image credits: Freepik
Tamil

இதுவும் தவறு

கர்ப்ப காலத்தில் சில பெண்கள் அதிக வேலை செய்வார்கள். சிலரோ நாள் முழுவதும் படுக்கையிலே இருப்பார்கள். இந்த இரண்டு விஷயங்களையும் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

தண்ணீர்

கர்ப்ப காலத்தில் உடலுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படும். சரியாக தண்ணீர் குடிக்காமல் இருந்தால் தலைசுற்றல் சோர்வு ஏற்படும். மேலும் குழந்தைக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

Image credits: freepik
Tamil

தூக்கமின்மை

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை, மன அழுத்தம் இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அதாவது குழந்தையின் மனம், உடல் வளர்ச்சியில் பிரச்சனைகள் ஏற்படும்.

Image credits: Freepik
Tamil

உணவு முறை

கர்ப்ப காலத்தில் சிலர் தங்களுக்கு பிடித்ததை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும். மேலும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

Image credits: social media
Tamil

வழக்கமான பரிசோதனை

கர்ப்ப காலத்தில் வழக்கமான பரிசோதனை செய்ய வேண்டும்.. அப்போதுதான் தாய் மற்றும் குழந்தையின் நிலையை கண்டுபிடித்து சரியான நேரத்தில் பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.

Image credits: our own
Tamil

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

கர்ப்ப காலத்தில் லேசான உடற்பயிற்சி செய்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

Image credits: our own

நீங்க 5 மணி நேரத்துக்கும் குறைவா தூங்குற ஆளா? இந்த பிரச்சனைகள் வரலாம்

வாக்கிங் டிப்ஸ்! இப்படி நடந்தால் 'எடை' கண்டிப்பா குறையும்

சர்க்கரையைத் தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

வறண்ட கூந்தலை பட்டு போல மாற்ற தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க..