தினமும் காலையில் 30 நிமிட விறுவிறுப்பான வாக்கிங் கெட்ட கொழுப்பை குறைக்கும். மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கும்.
விறுவிறுப்பான காலை நடைபயிற்சி இன்சுலின் உணர்திறன், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். தினமும் உணவுக்கு பின் 10 நிமிடங்கள் நடக்கலாம்.
விறுவிறுப்பான வாக்கிங் அதிக கலோரிகளை எரிப்பதால் கொழுப்பை விரைவாக குறைக்கும். ஆரோக்கியமான எடை இழப்பு ஏற்படும்.
விறுவிறுப்பான நடைபயிற்சி எண்டோர்பின்களை வெளியிடுவதால் மனநிலை மேம்படுகிறது. கவலை, மனச்சோர்வின் அறிகுறிகள் நீங்கும்.
காலையில் நடப்பது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து சகிப்புத்தன்மையை அதிகரிக்கும். உற்சாகமாக அன்றைய நாளில் காணப்படுவீர்கள்.
நடைபயிற்சியால் கால்கள், இடுப்பு தசைகள், எலும்புகள் வலிமையாகின்றன. மூட்டு வலி, கீல்வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் குறையும்.
காலையில் விறுவிறுப்பான நடை செரிமானத்தைத் தூண்டும். இதனால் வெயில் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட தேவையில்லை.
அதிகாலை வெளிச்சம் உடலின் மீது படுவதால் மெலடோனின் உற்பத்தி அதிகமாகும். இது இரவில் தூக்கத்தை மேம்படுத்தும்.
சர்க்கரையைத் தவிர்ப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
வறண்ட கூந்தலை பட்டு போல மாற்ற தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க..
வெயிலால் முகம் கறுக்காமல் பாதுகாக்கும் பெஸ்ட் கிரீம்!
அசுர வேகத்தில் முடி கத்தையாக வளர இந்த ஒன்ன தடவுங்க போதும்!